சாத்தான்குளம் துயரம் 2 பேர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் போர்கொடி

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தேசிய அவமானம் என்றும் காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியும் ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.திரைப்பட நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். உலக அளவில் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ்,பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19ஆம் தேதி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர். அங்கு நடந்த வாக்குவாதத்தில் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

வியாபாரிகள் மரணம் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன.

நிவாரணமும், அரசு வேலையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற அரசு குற்றம் செய்த காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் அறிவித்தது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #JusticeForJeyarajAndFenix

இருவரின் மரணத்திற்கு காவல்துறையினருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முன்வைத்து பலரும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு கருத்துக்களை கூறி வருகின்றனர். திரைப்பட நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

பட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம்